பிக்பாஸில் இந்த நெருப்பு நாணயத்தை வைத்தே இந்த வாரம் முழுவதையும் பிக்பாஸ் கழித்துவிட்டார். 'உங்களுக்குக் கொடுத்த சக்தியைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. வீட்டை நீங்கள் ஆளவேண்டும்' என்று இசைவாணியை அழைத்து பிக்பாஸ் ரெய்டு விட்டார்.
அதிலிருந்து தனது ஆட்டத்தை ஆரம்பித்தார் இசைவாணி. தான் நாணயம் வைத்தால் மட்டுமே சமைக்க வேண்டும், சொல்வதைத் தான் சமைக்க வேண்டும் என பல்வேறு விதிகளை இசைவாணி அமல்படுத்தினார்.
அதுமட்டுமின்றி முழு வீட்டையும் இசைவாணி ராஜ்யம் செய்வதால், தனக்கு என்ன வேலை இருக்கிறது என இந்த வார தலைவரான மதுமிதா கேள்வி எழுப்பினார்.
இசைவாணி போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்வதாக குற்றஞ்சாட்டுகிறார் இமான். 'நீ சர்வதிகாரம் செய்யுற' என இசையைப் பார்த்து இமான் கூற உடனே இசைவாணி கண்ணீர் வடிக்கிறார். உண்மையில் சர்வாதிகாரம் டாஸ்க், பிக்பாஸ் இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா செய்ததது தான்.
அதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தோம் என்றால் இசைவாணி செய்வது சர்வதிகாரம் கிடையாது என்பது தெரியவரும். ஏற்கனவே இசைக்கும், இமானுக்கும் ஒரு பனிப்போர் செல்வதால் அவர் வேண்டும் என்றே குற்றஞ்சாட்டுகிறார் என்று கூட நாம் சொல்லாம்.
விவாத மேடை
இந்தச் சீசனின் முதல் விவாத மேடை நேற்றைய எபிசோட்டில் நடந்தது. எப்போதும் போல ராஜு நகைச்சுவையாகப் பேசி அந்த இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டார். கிராமத்துக் காரர்கள், நகரத்து வாசிகளின் ஆடைகளைப் பற்றி குறை சொல்வது வழக்கம். அதை தான் தாமரை, சுருதியிடம் குறிப்பிட்டார். அவர் சொன்னதைச் சுருதி சரியான முறையில், புன்னகையுடன் எதிர்கொண்டார்.
நகரத்து வாசிகளிடம் இருக்கும் ’HUG’ முறையைச் சுட்டிக்காட்டிப் பேசினார் ஐக்கி. இந்த விவாத மேடை கலவரமாக மாறுவேண்டும் என்பதற்காக பிக்பாஸ் இந்த டாஸ்க் கொடுத்தார். ஆனால் அங்கு ஒன்று நடக்கவில்லை என்பதால், தற்காலிமாக இந்த டாஸ்க் நிறுத்தப்படுகிறது என்றார் பிக்பாஸ்.
இதையும் படிங்க: BB DAY 25: நெருப்புல சூடு பத்தல.. வெளுத்து வாங்கிய பிக்பாஸ்!