நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் காப்பான். அதைத் தொடர்ந்து தனது மனைவியும், நடிகையுமான சயீஷாவுடன் இணைந்து ‘டெடி’ படத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து ஆர்யா தற்போது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஆர்யாவின் 30ஆவது படமான இப்படத்திற்கு சல்பேட்டா என்று பெயரிட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் 1970களில் நடந்த குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடிக்க, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்திற்காக நடிகர் ஆர்யா ஜிம் சென்று தனது உடல் எடையை அதிகரித்து ஃபிட்டாக வைத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
“You Never know how strong You are until Being strong is the only choice you have”
— Arya (@arya_offl) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
An Update about my next film at 5pm tomorrow #Arya30 #Prelook pic.twitter.com/I78DyhzRQY
">“You Never know how strong You are until Being strong is the only choice you have”
— Arya (@arya_offl) February 19, 2020
An Update about my next film at 5pm tomorrow #Arya30 #Prelook pic.twitter.com/I78DyhzRQY“You Never know how strong You are until Being strong is the only choice you have”
— Arya (@arya_offl) February 19, 2020
An Update about my next film at 5pm tomorrow #Arya30 #Prelook pic.twitter.com/I78DyhzRQY
இந்தப் பதிவிற்கு நம்பமுடியாத கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் என்று சயீஷா கமெண்ட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஈஷா மஹாசிவராத்திரியில் கலந்து கொள்ளும் இசை கலைஞர்கள்!