ETV Bharat / sitara

ஆர்யா-சாயிஷா இணைக்கு 'டெடி' டீசரை பரிசளித்த படக்குழு! - arya movie updates

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’டெடி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

'டெடி' டீசர் வெளியீடு
'டெடி' டீசர் வெளியீடு
author img

By

Published : Mar 10, 2020, 12:01 PM IST

'மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெடி’. ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் இதில் சாயிஷா கதாநாயகி.

இவர்களுடன் இணைந்து கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அறிவித்தபடி 'டெடி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆர்யாவுடன் ஒரு 'டெடி' பொம்மை இணைந்து அசத்தும் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

மேலும் 'டெடி' குழந்தைகளைக் கவரும்வகையில் அமைந்துள்ளதால், கண்டிப்பாக வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை விடுமுறைக்கு வெளியாகும் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இன்று ஆர்யா, சயீஷாவின் திருமண நாளையொட்டி 'டெடி' படக்குழு அவர்களுக்கு பரிசளிக்கும்விதத்தில் டீசரை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கால் செய்தால் கொரோனா- மிரண்டு போன மாதவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.