சென்னை: சென்னையில் 1967 இல் ஜனவரி 6 ல் பிறந்தவர் தான் ரகுமான் என்னும் இசை ஜாம்பவான். இளமையிலேயே தந்தை மரணம் 12 வயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்றார். எத்தனையோ வேதனைகள் வந்தாலும் வாடியதில்லை. வெற்றியில் ஆடியதுமில்லை.
முதல் பட வாய்ப்பு
ரோஜா படத்தின் வாய்ப்பு வந்த போது பல விளம்பரங்களுக்கும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு கிடைத்த சம்பளம் 25000 ரூபாய்தான். அந்நாளில் அது அவருக்கு விளம்பரங்களில் கிடைத்த வருமானத்தை விட குறைவே, இருந்தாலும் முதல் வாய்ப்புக்காக தவித்த அவருக்கு கிடைத்த வரம் தான் ரோஜா. முதல் படத்திலேயே தேசிய விருது. இந்தியாவே திரும்பி பார்க்க வைத்த இளம் இசையமைப்பாளர்.
ரோஜாவை தொடர்ந்து ஜெண்டில்மேன், கிழக்கு சீமையிலே, திருடா திருடா என அதிரடி கிளப்ப ஆரம்பித்தார் ரகுமான். தமிழனால் இந்தியில் வெற்றி பெற முடியாது என்ற நிலையை மாற்றியவர் ரகுமான். இவர் இசையமைத்த ரங்கீலா படத்தின் இசைக்கு பின்னர் ரகுமான் பெயர் வந்தாலே துள்ளி குதிக்கவைத்தார்.
இந்தியின் முன்னனி நடிகர்களின் படத்தில் இசையமைக்க தொடங்கினார். சாருக்கானின் தில்சே வட இந்தியா முழுவதும் ஒரு புயலை உண்டாக்கியது.ஜோதா அக்பர் , நாயக் ,குரு எனத் தொடங்கி தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் அடரங்கி(தமிழில் கலாட்டா கல்யாணம்) வரை இந்தி திரையுலகில் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
சர்வதேச அளவில் புயல் வீசியது
இந்தியாவிலேயே ஆஸ்கார் பெற்ற முதல் இசையமைப்பாளர் ரகுமான் தான். “ ஸ்லம்டாக் மில்லியனர்” படத்து க்கு சிறந்த இசை மற்றும் சிறந்த பின்னனி இசை என இரண்டு ஆஸ்காரை தூக்கி வந்தார். உலக அளவில் பம்பாய் டீரிம்ஸ் என்னும் இசை நிகழ்ச்சி. மைக்கேல் ஜாக்சனோடு ‘மைக்கேல் ஜாக்சன் அண்ட் பிரண்ட்ஸ்’ இல் இணைந்து பணியாற்றினார்.
ஆஸ்கார் வங்கியதும் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று தன் தாய் தமிழில் தன்னடக்கத்தை காட்டியவர். அனைவரிடமும் இனிமையாக பழகும் குணாதிசியம் உடையவர். ஒரு படம் வெற்றி அடைந்ததும் பகட்டு காட்டும் திரையுலகில் ஒரு வரலாறு படைத்த கலைஞன் ரகுமான், இருப்பினும் அதன் கர்வம் சிறிதளவு கூட காட்டிக்கொள்ளாமல் இருப்பவர்.
ரகுமான் குவித்த விருதுகள்
1992,ரோஜா-சிறந்த இசையமைப்பாளர் - தேசிய விருது, பிலிம்பேர்",
1992,ஜெண்டில்மேன் - சிறந்த இசையமைப்பாளர் - தமிழ்நாடு மாநில விருது, பிலிம்பேர்"
1994,காதலன் - "சிறந்த இசையமைப்பாளர் - தமிழ்நாடு மாநில விருது, பிலிம்பேர்"
1997, மின்சார கனவு - "சிறந்த இசையமைப்பாளர் - தேசிய, தமிழ்நாடு மாநில மற்றும் பிலிம்பேர் விருதுகள்"
2003,கன்னத்தில் முத்தமிட்டாய்- இந்திய தேசிய விருது
2008,ஸ்லம்டாக் மில்லியனர் - சிறந்த இசை மற்றும் பின்னனி இசைக்கான ஆஸ்கார்
இந்த விருது பட்டியல் இன்னும் நிறைவடையவில்லை, நீண்டு கொண்டுதான் உள்ளது.
இத்தகைய இசை மேதை நம் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த வரப் பிரசாதம். இசைப்புயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இதையும் படிங்க:தமிழ்நாடு சட்டப்பேரவையில் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல்!