நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. அதன்படி, சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ’அரபிக் குத்து’ புரொமோ வெளியாகியது.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், காதலர் நாளன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று (பிப்ரவரி 14) மாலை 6 மணிக்கு ‘அரபிக் குத்து லிரிக்கல் வீடியோ’ வெளியானது. இதில், நடிகர் விஜய் நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத், ஜோனிட்டா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் வெளியாகிய அரை மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தொடர்ந்து யூ-ட்யூபில் இப்பாடல் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.
இதையும் படிங்க: முதல்முறையாக ஜோடி சேரும் மைக் மோகன் - குஷ்பூ