இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவரின் நாயகன், தளபதி, மௌன ராகம், ரோஜா, அலைபாயுதே, இருவர், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட கிளாசிக் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பதே மணிரத்னத்தின் நெடுநாள் கனவு. இதற்காக பலமுறை முயற்சி எடுத்து கைகூடவில்லை. தற்போது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை உயிர் கொடுக்க தீவிரம் காட்டி வருகிறார் மணிரத்னம். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மல்டி ஸ்டார்கள் நடிக்க உள்ளனர்.
மேலும், இந்தப் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது அவரது கால்ஷீட் டைரி புல்லாக இருப்பதால் நோ சொல்லி விட்டார். இதனால், பாகுபலி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்த அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காக நடிகை அமலா பாலினை படக்குழு அணுகியுள்ளது. என்ன கதாபாத்திரம் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. மணிரத்னம் படத்தில் ஒரு சிறு வேடத்திலாவது நடிக்க மாட்டோமா என்று நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதனால், இந்த வாய்ப்பை அமலா பால் கெட்டியாக பிடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.