லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' காமெடி கலந்த திகில் படமாக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதே பாணியில் முனி படத்தின் இரண்டாம் பாகமாக காஞ்சனா படம் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது.
2011ஆம் ஆண்டு வெளிவந்த 'காஞ்சனா' படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்ய லாரன்ஸ் முடிவுசெய்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அக்ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு 'லட்சுமி பாம்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், வெடிகுண்டு போன்ற கதையுடன் வருகிறேன் எனவும் 2020 ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க பேச்சுவார்தை நடைபெற்றுவருகிறது.