கரோனா வைரஸ் தொற்று காரணமாக கிட்டத்தட்ட 150 நாள்களாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த 'அண்டாவ காணோம்' திரைப்படம் நேரடியாக ஜே.எஸ்.கே. பிரைம் மீடியா ஓடிடி தளத்தில் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை வேல்மதி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகவிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் வெளியாகும் தேதி தள்ளிப்போனது. இதேபோல் ஓடிடி தளத்தில் கீர்த்தி சுரேஷின் 'பென்குயின்', 'லாக்கப்' 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வெளியாகின.