ETV Bharat / sitara

2 ஆண்டுகளுக்குப் பின் ரீ-என்ட்ரி ஆன நடிகை சங்கீதா! - விஜய் ஆண்டனி

சென்னை: எஸ்.என்.எஸ். மூவீஸ் கெளசல்யா ராணி தயாரிப்பில் உருவாகி வரும் 'தமிழரசன்' படத்தில், 2 ஆண்டுகளுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சங்கீதா ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகை சங்கீதா
author img

By

Published : Mar 16, 2019, 12:00 PM IST

தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.இவர்களோடு சுரேஷ்கோபு, ராதாரவி,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா ஆகியோருடன் முக்கிய வேடத்தில் நடிகை சங்கீதாவும் நடிக்கவுள்ளார். சங்கீதா ‘உயிர்’, ‘பிதாமகன்’, ‘தனம்’ போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவராவர்.

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த 'நெருப்புடா' படத்தில் நெகடிவ் வேடத்தில் தூள் கிளப்பிய சங்கீதா, அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், தற்போது தமிழரசன் படத்தின் மூலம் அவர் மீண்டும் நடிக்கவுள்ளார். இதுகுறித்து நடிகை சங்கீதா கூறும்போது, "எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே நிராகரித்து இருந்தேன். தற்போது நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அழைப்பு வந்தது. அந்த கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்.

இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்படும். எனக்கு மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம். இதில் என் கதாபாத்திரம் முக்கியத்துவம்", என்றார்.

On Fri, 15 Mar 2019, 8:31 pm SHANTHI S, <shanthi.s@etvbharat.com> wrote:

2 ஆண்டுகளுக்குப் பின்  தமிழரசன் படத்தில் நடிக்கும் நடிகை சங்கீதா

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி  தயாரிப்பில் உருவாகும் படம்  ” தமிழரசன் “ இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக நடிகை  ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

இவர்களோடு சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம்,,  முனீஸ்காந்,த் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் இது வரும் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சங்கீதா ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்தார் நடிகை சங்கீதா. அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல்  இருந்த நடிகை சங்கீதா  தற்போது மீண்டும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார் .

இதுகுறித்து நடிகை சங்கீதா கூறும்போது

எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே நிராகரித்து இருந்தேன் தற்போது நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அழைப்பு வந்தது அந்த கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்.

இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப் படும்  மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம் இது. இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.