ETV Bharat / sitara

மகேஷ் பாபு படம் குறித்து படத்தின் நாயகி ராஷ்மிகா ட்விட் - Actress Rashmika tweet about Sarileru Nekkevvaru dubbing

மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு திரைப்படமான 'சரிலேரு நீக்கெவரு' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அப்படத்தின் கதாநாயகி ட்வீட் செய்துள்ளார்.

mahesh babu
mahesh babu
author img

By

Published : Dec 22, 2019, 2:24 PM IST

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'சரிலேரு நீக்கெவரு' திரைப்படம் மகா சங்கராந்தி பண்டிகையையொட்டி 2020 ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிறது. மகேஷ் பாபுவின் 26ஆவது படமான இதில் அவர் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தில் 'லேடி சூப்பர் ஸ்டார்' விஜயசாந்தி, 'கீதா கோவிந்தம்' படப்புகழ் ராஷ்மிகா, ஆதி, பிரகாஷ் ராஜ், சச்சின் கெடேகர், பிரதீப் ராவத் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். அனில் ரவிப்புடி இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

மகேஷ் பாபு, mahesh babu
மகேஷ் பாபு

இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இதனிடையே படத்தின் நாயகியான ராஷ்மிகா, 'சரிலேரு நீக்கெவரு' படத்திற்காகதான் டப்பிங் செய்யும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், ரோமிற்கு செல்வதற்கு முன்பாக டப்பிங் பணியில் ஈடுபட்டதாகவும், இதோடு பணி முடிவடைகிறது. மீண்டும் ஜனவரி 5ஆம் தேதி படக்குழுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பார்க்கலாம். சங்கராந்தி பண்டிகைக்கு தயாராக இருங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 'சரிலேரு நீக்கெவரு' படத்தின் ’ஹீ இஸ் சோ க்யூட்’ பாடலில் ராஷ்மிகா அசத்தலாக நடனம் ஆடியிருந்தார்.

இதையும் படிங்க: படுத்துக்கொண்டே எடுத்த செல்ஃபி - ரைசாவுக்கு ஏற்பட்ட சோகம்!

Intro:Body:

mahesh babu heroine tweet about wrap

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.