சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசை அமைக்கிறார்.
கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. அப்போது படக்குழுவினர் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரஜினிக்கும் உடல்நிலை பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதி உள்ளிட்டவைகளால் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து அண்ணாத்த படப்பிடிப்பு மீன்டும் சென்னையில் தொடங்கியது.
அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்ட படக்குழுவினர், சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கினர். இதில் ரஜினி உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர். இதனையடுத்து இன்று (ஏப்.27) நயன்தாரா அண்ணாத்த படப்பில் கலந்துக்கொள்வதற்காகத் தனி விமானத்தில் ஹைதராபாத் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.