ETV Bharat / sitara

பேட்ட மாளவிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - HBD malavika mohanan

நடிகை மாளவிகா மோகனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

மாளவிகா
மாளவிகா
author img

By

Published : Aug 4, 2021, 7:55 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'பேட்ட' படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். சசிகுமாரின் மனைவியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார்.

தமிழில் முதல் படத்திலேயே இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு, அவர் நடத்திய போட்டோ ஷூட்டும் காரணம் எனலாம். அதனால்தான் என்னவோ அதை இன்றும் விடாமல் செய்துவருகிறார்.

மாளவிகா
மாளவிகா

பேட்ட திரைப்படத்துக்கு பிறகு 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். சூப்பர் ஸ்டாருடன் முதல் படம், தளபதியோடு இரண்டாவது படம் என அவரது கிராஃப் ஏறியதால் பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது. இவர் தற்போது தனுஷின் ’மாறன்’, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார்.

மாளவிகா
மாளவிகா

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் தவிர கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார்.

மாளவிகா
மாளவிகா

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் இன்று (ஆக. 04) தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இதனையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: HBD தலைவாசல் விஜய் - ரசிகர்கள் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.