ETV Bharat / sitara

'என் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு, யாரும் ஆதரவு தரவேண்டாம்' - நடிகை அம்பிகா போலி முகநூல் கணக்கு

தனது பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும்; அதற்கு யாரும் ஆதரவு தர வேண்டாம் எனவும் நடிகை அம்பிகா, தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Actress Ambika warns fans of fake Facebook account

author img

By

Published : Jun 5, 2020, 1:50 AM IST

தமிழ்த் திரையுலகில் முக்கிய நடிகையாகத் திகழ்ந்தவர், நடிகை அம்பிகா. குழந்தை பாத்திரத்தில் அறிமுகமானவர், இன்றும் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவர் அண்மையில் தனது பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு ஒன்று செயல்பட்டு வருவதாக தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் அந்தப் போலி ஃபேஸ்புக் கணக்கின் படத்தை பகிர்ந்து, அதை யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தும்; அந்தப் போலி கணக்குக்கு எதிராகப் புகார் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தினர்.

இதுபோன்று இணையத்தில் இருக்கும் குற்றங்களில் பிரபலங்கள் பலரும் சிக்கியுள்ளனர். இந்தக் காரணத்துக்காக பிரபலங்களுக்கு ப்ளூ டிக் பக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அது இல்லாதவர்கள் இதுபோன்ற சிக்கல்களில் தவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.