ETV Bharat / sitara

நடிகர் ராதாரவிக்கு நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை! - கண்டன அறிக்கை

சென்னை: நடிகை நயன்தாரா குறித்து அவதூறாக பேசிய நடிகர் ராதாரவி, இதுபோன்ற பேச்சுக்களை தொடர்ந்தால் தொழில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

ராதாரவி-நயன்தாரா
author img

By

Published : Mar 25, 2019, 3:23 PM IST

கொலையுதிர் காலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் பொதுமேடைகளில் இழிவாக பேசுவது தொடர்ந்தால் நடிகர் சங்கம் நடிகர் ராதாரவிக்கு தொழில் ஒத்துழைப்பு அளிக்காது என்று கடும் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை தென்னிந்திய திரைப்பட சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

condemn
தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டன அறிக்கை

சமீபத்தில் நடைபெற்ற கொலையுதிர் காலம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது. இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த மேடையில் மட்டுமல்ல பல காலங்களாக, தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்படத் துறைகளிலும், இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும் பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஊடகங்களின் மூலம் உலகமெங்கும் பரவி வருகிறது. இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் மற்றும் நடிகர்களுக்கும் இதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும் ஒரு அவமானமான சூழ்நிலையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை.

condemn
தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டன அறிக்கை

திரைத்துறையில் தங்களது தந்தையாருக்கு பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்களாக நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள், தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக இருக்கும். ஆனால், இது போன்ற கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது.
திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையை சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை. எது எப்படி இருப்பினும் இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து இதுபோன்ற பகிரங்கமான பேச்சை தவிர்த்து விட்டு விடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதைத் தவிர்த்து இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி தீவிரமாக முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Intro:Body:

Actors association condemns on radha ravi issue

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.