ETV Bharat / sitara

'கீழடி வரலாறு தமிழர்களுக்குச் சொந்தமானது' - நடிகர் சசிகுமார் பெருமிதம்! - கீழடி ஆய்வு 5ஆம் கட்டப்பணி

'கீழடியின் வரலாறு சாதி, மதம், அரசியல் சார்ந்தது அல்ல. அது அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானது' என்று நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.

actor sasikumar
author img

By

Published : Oct 13, 2019, 12:00 PM IST

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பண்பாட்டு கழகத்தின் சார்பில் 'கீழடி வைகை நதி நாகரிகம்' என்னும் தலைப்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சசிகுமார் மற்றும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.

கீழடி அகழாய்வு குறித்துப் பேசிய நடிகர் சசிகுமார், 'என்னடா கீழடிக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கு... இவனை மேடையில் ஏற்றி பேச சொல்றாங்க என்று நினைக்க வேண்டாம். எனக்கும் கீழடிக்கும் நிறைய பந்தம் இருக்கிறது. 2015ஆம் ஆண்டு கீழடியில் நடைபெற்ற அகழாய்வை நேரில் சென்று பார்வையிட்டேன். அங்கு சென்றபோது தமிழர்களின் கலாசாரத்தையும், நாகரிகத்தையும் அறிந்துகொண்டேன்.

ஒரு அர்ப்பணிப்போடு, தனது உழைப்பை புகுத்தி தொல்லியல்துறையினர் அகழாய்வை செய்து வருகின்றனர். சு.வெங்கடேசன் கீழடிக்காக தொடர்ந்து போராடி வருகிறார். அகழாய்வுப் பணிக்குப் பொறுமை தேவை. தொல்லியல் துறை வல்லுநர்கள் தமிழர்களின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிக்கொண்டுவர மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் நம்முடைய வரலாற்றை எடுத்துரைக்கிறது.

கீழடியின் வரலாறு சாதி, மதம், அரசியல் சார்ந்தது அல்ல. அவை அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானது. இதனை யாரும் அரசியலாக்க வேண்டாம். இது நம்முடைய வரலாறு. இதை யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது. கீழடியின் அகழாய்வு மூலம் நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு தெரியவந்துள்ளது.

நமது கலாசாரத்தை உலகறிய செய்ய வேண்டும். கீழடியில் கிடைத்தப் பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைத்தால் அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள சிறப்பாக இருக்கும். கீழடியின் வரலாறை மாணவர்கள் அறிந்துகொள்ள பள்ளிப்பாடப் புத்தகத்தில் பாடமாகவும் இடம்பெற வேண்டும். இது திரைப்படமாக வர முயற்சித்தால் மிகவும் நல்லது' எனக் கூறி பெருமகிழ்ச்சியடைந்தார்.

இதையும் படிங்க:

பெண்களை மட்டம் தட்டுவதுபோல்தான் இந்த வருடம் பிக்பாஸ் இருந்தது' - நடிகை கஸ்தூரி பேச்சு!

Intro:Body:

sasikumar

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.