நடிகர் ராம் சரண் தனது தந்தை சிரஞ்சீவி நடிக்கும் 'சயீரா நரசிம்ம ரெட்டி' என்ற வரலாற்றுப் படத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தில், அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மேலும், சயீரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக சிரஞ்சீவிக்கு சொந்தமான பண்ணை வீட்டின் வளாகத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பண்ணை வீட்டில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்ததில் ரூ.2 கோடி விலை மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக தெரிகிறது.
ஆனால், இந்த தீ விபத்தில் நடிகர் ராம் சரணுக்கு சம்பந்தம் இருப்பதாகவும், படம் எடுக்கப் பணம் இல்லாமல் இன்சூரன்ஸ் பணத்திற்காக ராம் சரண் செட்டை கொளுத்திவிட்டார் என்னும் வதந்தி செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வந்துள்ளன.
இந்த வதந்தி செய்தி ராம் சரணின் காதிற்கு சென்றதும் கோபமடைந்துள்ளார். அப்போது தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்த ராம் சரண், 'என்ன இது முட்டாள்தனமா இருக்கு ரூ. 200 கோடி போட்டு படம் தயாரிக்கிறேன். கேவலம் ஒரு 2 கோடி ரூபாய் இன்சூரன்சிற்காக செட்டை எரிப்பேனா?' என்று கூறியுள்ளார்.