தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளியான படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் படத்தைப் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
தற்போது தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்... 'அசுரன் - அசலான, ஆழமான, உண்மையான ஒரு படம். மிகச்சிறந்த சினிமா. தனுஷ், வெற்றிமாறன், ஜி.வி. பிரகாஷ், மற்றும் ஒட்டுமொத்த அசுரன் குழுவுக்கும் வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.
-
Asuran...raw real and intense... Cinema at its best👌Congratulations @dhanushkraja @VetriMaaran @prakashraaj @gvprakash @theVcreations @VelrajR and entire team #Asuran
— Mahesh Babu (@urstrulyMahesh) October 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Asuran...raw real and intense... Cinema at its best👌Congratulations @dhanushkraja @VetriMaaran @prakashraaj @gvprakash @theVcreations @VelrajR and entire team #Asuran
— Mahesh Babu (@urstrulyMahesh) October 20, 2019Asuran...raw real and intense... Cinema at its best👌Congratulations @dhanushkraja @VetriMaaran @prakashraaj @gvprakash @theVcreations @VelrajR and entire team #Asuran
— Mahesh Babu (@urstrulyMahesh) October 20, 2019
இதையும் வாசிங்க: அசுரனைப் பாராட்டிய உலக நாயகன் கமல்ஹாசன்