தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு, ‘ராஜா குமருடு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து தமிழ், தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளின் படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சரிலேறு நீக்கவெரு’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இதற்கிடையே மகேஷ் பாபு, ஹலோ செயலியின் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், தான் மிகவும் கூச்சமானவர் என்றும், சென்ஸிட்டிவ் சுபாவம் உடையவர் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய நடிகர் மகேஷ், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனது தந்தை கிருஷ்ணா என்றும் கூறியுள்ளார்.
மேலும், தொடர்ந்து இதுபோன்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க இருப்பதாகவும், அதற்காக ஹலோ செயலியில் இணையுங்கள் எனவும் தனது ரசிகர்களுக்கு மகேஷ் பாபு அழைப்பு விடுத்துள்ளார். மகேஷ் பாபுவின் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: விமானப் பெண் லுக்கில் கங்கனா - தேஜஸ் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!