தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விவேக். இவர் தனது படங்களில் நகைச்சுவை மூலம் ரசிகர்களை சிந்திக்கவும் வைப்பார். இவரை ரசிகர்கள் சின்ன கலைவானர் என அழைப்பர்.
சமூக சேவகர் விவேக்
மேலும் விவேக் படங்களில் கருத்து சொல்வது மட்டுமல்லாது, நிஜவாழ்வில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் கட்டளைக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுவந்தார். இந்நிலையில், விவேக் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
மரக்கன்று நட்ட செல் முருகன்
அந்த நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதி விவேக் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கரோனா தடுப்பூசிதான் காரணம் என புரளிகள் சமூகவலைதளத்தில் பரவின. இதற்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை என சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
- — cellmurugan (@cellmurugan) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— cellmurugan (@cellmurugan) November 19, 2021
">— cellmurugan (@cellmurugan) November 19, 2021
இந்நிலையில், மறைந்த விவேக்கின் பிறந்தநாள் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அவரின் நினைவாக விவேக்குடன் பயணித்த அவரது உதவியாளரும் நண்பரும் நடிகருமான செல் முருகன் தனது வீட்டின் அருகே மரக்கன்றுகளை நட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டு நீங்கள் நட்ட 33 லட்சம் மரக்கன்றுகள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: விவேக்கிற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஆர்யா