ETV Bharat / sitara

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வீக்கான சிஸ்டம் தமிழகத்தில் நிலவுகிறது - நடிகர் பாபி சிம்ஹா

நடிகர் பாபி சிம்ஹா நடித்த அக்னி தேவி படம் இன்று ரிலீஸாகியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக நடிகர் பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார்.

bobby
author img

By

Published : Mar 22, 2019, 8:38 PM IST

நடிகர் பாபி சிம்ஹா `அக்னி தேவ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை ஜான்பால்ராஜ் - ஷார் சூர்யா ஆகிய இருவரும் தயாரித்து, இயக்கினார்.

இப்படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். மேலும் மதுபாலா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்நப் படம் இன்று(மார்ச் 22) வெளியானது. ஆனால், இப்படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது எனத் தடை வாங்கியிருக்கிறார்.

bobby speech

இதுகுறித்து நடிகர் பாபி சிம்ஹா வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியிருந்தாவது, அக்னி தேவ் என்ற படத்தின் மீது தற்போது கேஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திடீரென்று திங்கட்கிழமை மாலை அக்னி தேவி என்று சென்சாரில் பெயர் மாற்றி இந்த மூன்று நாட்களில் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை இப்படத்தை வெளியிட தடை செய்ய கோரி கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இதைக் கேள்விப்பட்டு நான் காவல்துறையில் வழக்கு பதிவு செய்து படம் வெளியிடுவதற்கு தடையும் வாங்கி விட்டேன். இந்த தகவலை அனைவருக்கும் தெரியப் படுத்தியும் உள்ளோம். அதையும் தாண்டி இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தில் நான் ஐந்து நாட்கள் மட்டுமே நடித்தேன். அக்ரிமென்ட் பிரகாரம் இந்த படத்தின் பெயர் அக்னி தேவ். படத்திற்கு பால்ராஜ் இயக்குனர். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை ஏதாவது 25 நாட்களுக்கு என்னுடைய கால்ஷீட். இதில் நான் ஐந்து நாட்கள் மட்டுமே நடித்துள்ளேன்.

இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எப்படி படத்தை முடித்தார் என்று தெரியவில்லை. படத்தில் இடம்பெற்றுள்ள வாய்ஸ் என்னுடையதல்ல, டப்பிங் செய்து இருக்கிறார்கள். டபுள் பாடி யூஸ் பண்ணி இருக்கிறார்கள் அதாவது என்னை மாதிரியே இருக்கிற ஒருவரை என்னுடைய முகம் வைத்து CG செய்து படத்தை முடித்திருக்கிறார்கள்.

நிதீ மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒரு படம் எப்படி வெளிவந்தது என்று தெரியவில்லை. இதற்கு யார் இருக்கிறார்கள், என்ன அரசியல் நேக்கம் இருக்கிறது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

என்னை பழி வாங்குகிறார்கள் இந்த படம் ரிலீஸ் பண்ணுவதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. நல்ல படங்கள் அதிகமாக உள்ளது அதற்கு சப்போர்ட் பண்ணி ரிலீஸ் பண்ண உதவுங்கள் நிறையபேர் கஷ்டப்படுறாங்க அதை விட்டுவிட்டு ஒரு 'பிராடு கான்சப்ட்' சப்போர்ட் செய்து ரிலீஸ் பண்றீங்க என்ன செய்வது என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் மட்டும் தான் இது நடக்கும் என்று தெரிகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு வீக்கான சிஸ்டம் இருக்கா என்பது எனக்கு தெரியவில்லை என்று வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

 ’அக்னி தேவி’ படத்தினை தடையை மீறி ரிலீஸ் செய்த குழுவினர் குறித்து பேசிய பாபி சிம்ஹா...   

வீடியோ.

Download link 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.