நடிகர் ஆனந்தராஜ் தம்பி தூக்கிட்டு தற்கொலை - நடிகர் ஆனந்தராஜ்
புதுச்சேரி: நடிகர் ஆனந்தராஜ் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி திருமுடி நகரை சேர்ந்தவர் கனகசபை, இவர் வட்டிக்கு பணம் கொடுப்பது, மாதச் சீட்டு பிடிப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்தார். இவர் திரைப்பட நடிகர் ஆனந்தராஜ் தம்பி ஆவார். இன்னும் திருமணகாத நிலையில் வீட்டில் தனியாக வசித்துவரும் இவர், தினமும் காலையில் எழுந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் பேசுவது வழக்கம்.
இன்று காலை அவரிடம் சீட்டுக்கு பணம் கொடுக்க சிலர் அவர் வீட்டிற்கு வந்துள்ளனர். கதவை தட்டியபோது திறக்கவில்லை. வெகுநேரமாகியும் வீட்டு கதவு திறக்காததால், அவரது உறவினர்களுடன் வந்து கதவைத் திறந்தபோது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிய போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கனகசபை திருமணமாகாமல் தனியாக இருந்ததால், அவரது பரம்பரை சொத்தை ஒருவர் அபகரித்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.