ETV Bharat / sitara

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஆண் குழந்தை - பிக்பாஸ் ஆரவ்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் (BiggBoss Winner) ஆரவுக்கு இன்று (நவம்பர் 24) ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தை
ஆண் குழந்தை
author img

By

Published : Nov 24, 2021, 12:45 PM IST

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு டைட்டில் பட்டத்தை வென்றவர் நடிகர் ஆரவ் (Actor aarav). இதன்மூலம் பிரபலமடைந்த இவர் இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளியான மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

தொடர்ந்து இவரது நடிப்பில் ராஜ பீமா, மீண்டும் வா அருகில் வா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இவரும் நடிகை ஓவியாவும் காதலித்துவருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆரவ்- ராஹி
ஆரவ்- ராஹி

ஆனால் திடீரென இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ராஹியை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஹி கர்ப்பமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஆரவ்-ராஹி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை (Baby Boy) பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: பாரதி கண்ணம்மா வில்லிக்கு குழந்தை பொறந்தாச்சு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.