செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கோப்ரா'. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இந்தப் படத்தின் ’தும்பி துள்ளல்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.
தற்போது மூன்று மில்லியன் பார்வையாளர்களை இந்தப் பாடல் கடந்துள்ள நிலையில், சஹானா என்ற கண் பார்வையற்ற சிறுமி ஒருவர் இப்பாடலை கீ-போர்டில் வாசித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இவரின் இந்தக் காணொலி ட்விட்டரில் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று அதிக அளவில் பகிரப்பட்டு தற்போது ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் சஹானாவின் இந்தக் காணொலியை 'ஸ்வீட்' எனக் குறிப்பிட்டு ரீ ட்வீட் செய்து பாராட்டியிருந்தார்.
இதையும் படிங்க : 'நெப்போட்டிஸத்துக்கு பலியானேன்'- வாயால் சிக்கிய சைஃப் அலிகான்