மும்பை: அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியான வரலாற்றுப் படமான 'தனாஜி: தி அன்சங் வாரியர்' ரூ. 200 கோடி வசூலித்துள்ளது.
உலகம் முழுவதும் ஜனவரி 10ஆம் தேதி வெளியான 'தனாஜி: தி அன்சங் வாரியர்' ரசிகர்கள் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. படம் வெளியாகி தற்போது 15 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் பாக்ஸ் ஆஃபிஸில் 200 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.
இந்தத் தகவலை படத்தின் கதாநாயகனான அஜய் தேவ்கான் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில், தனாஜி 200 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக புகைப்படம் வெளியிட்டு, 'மிகப்பெரிய புகழை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தனாஜி படத்தை 2020ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கிய அனைவருக்கும் நன்றிகள்' என்று #TanhajiUnitesIndia ஹேஷ்டாக்குடன் குறிப்பிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதேபோல் 'தனாஜி' பட கதாநாயகியும், அஜய் தேவ்கானின் மனைவியுமான நடிகை கஜோல் தனது இன்ஸ்டாகிராமில், '200 கோடி ரூபாய் வசூலை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. 250 கோடி ரூபாய் வசூலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் ராணுவப் படை தளபதியாக திகழ்ந்த தனாஜி மாலுசரேவின் தியாகத்தை சொல்லும் கதையாக 'தனாஜி: தி அன்சங் வாரியர்' படம் அமைந்துள்ளது.
சின்ஹாகட் கோட்டையை அவுரங்கசீப் படையிடமிருந்து பாதுகாப்பதற்காக சண்டையிட்டு தன் உயிரை நீத்தவர் தனாஜி. இந்தக் கதைதான் தனாஜி படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஓம் ராவுட் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தனாஜி கேரக்டரில் அஜய் தேவ்கானும், வில்லனாக சயீப் அலிகானும் நடித்துள்ளனர். தனாஜியின் மனைவியான சவித்திரிபாய் கேரக்டரில் கஜோல் நடித்துள்ளார்.