நடிப்பு மற்றும் நடனத்தின் மூலம் உச்சக்கட்ட நடிகர்களையும் மலைக்க வைத்தவர் ரித்திக் ரோஷன். கிரிஷ், கிரிஷ் 2வில் சூப்பர் ஹீரோவாக அசத்தினார். இவரது நடனத்தை கண்டு வியக்காதவர்களே கிடையாது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் இவர், தற்போது பிரபல கணித மேதை ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியிருக்கும் 'சூப்பர் 30' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் ரித்திக் ரோஷனா இது என அனைவரையும் வாயடைத்து போனார்கள். அழுக்கு படிந்த சட்டை, கரை படிந்த முகம் என மாணவர்களுக்கு பிடித்த கணித வாத்தியாராக தோன்றியிருந்தார். ட்ரைலரை பார்த்த பின்னர் பலருக்கும் இப்படத்தை பார்க்க தூண்டியது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரித்திக் ரோஷன் நடிப்பில் சூப்பர் 30 படம் வெளியாவதால் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இந்நிலையில், சூப்பர் 30 படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கேள்விக் குறி' வீடியோ பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்த பாடலில் நடிகர் ரித்திக் ரோஷன், பாடம் கற்கும் 30 மாணவர்களுக்கு கணிதத்தின் மூலமே முப்பரிமாணத்தையும் விளக்கி காட்டும் காட்சி அற்புதமாக உள்ளது. இந்த பாடல் கணிதத்தை நேசிப்பவரை தாண்டி அனைவருக்கும் பிடிக்கும் பாடலாக அமைந்துள்ளது.
-
'पूछो' तोह जाने! कैसे मिलेगा हर अगर का जवाब, #QuestionMark करेगा अब सबका हिसाब!
— Hrithik Roshan (@iHrithik) July 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Giving a voice to every question quite literally! Had a ball of a time not just filming but singing the super fun song. #Super30 https://t.co/pUPU0xD44l
">'पूछो' तोह जाने! कैसे मिलेगा हर अगर का जवाब, #QuestionMark करेगा अब सबका हिसाब!
— Hrithik Roshan (@iHrithik) July 8, 2019
Giving a voice to every question quite literally! Had a ball of a time not just filming but singing the super fun song. #Super30 https://t.co/pUPU0xD44l'पूछो' तोह जाने! कैसे मिलेगा हर अगर का जवाब, #QuestionMark करेगा अब सबका हिसाब!
— Hrithik Roshan (@iHrithik) July 8, 2019
Giving a voice to every question quite literally! Had a ball of a time not just filming but singing the super fun song. #Super30 https://t.co/pUPU0xD44l
இந்த கேள்விக்குறி பாடலை ரித்திக் ரோஷனே பாடியுள்ளார். இந்த கேள்விக்குறி பாடல் வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது.