கொச்சி: பணம் வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனக் கூறி பாலிவுட் நடிகை சன்னி லியோன் மீது தனியார் நிறுவனம் பண மோசடி புகார் அளித்தது. இதுதொடர்பாக அவரிடம் கேரளா குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், அவர் மீது கைது நடவடிக்கை கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் உள்பட மூன்று பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன் பிணை கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் மேனன், சன்னி லியோனை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பாமல் அவர் மீது குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன், புகார்தாரர் ஷீயாஸுக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மூன்றாம் தேதி நடிகை சன்னி லியோனிடம் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், அவர் தன் மீது ஐபிசி 406, 420 பிரிகளின் கீழ் புகார் செய்திருப்பது குறித்த தெரியவந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த சன்னி லியோன், மோசடி செய்ததாக கூறப்படும் விஷயத்தில் புகார் செய்தவர்களுக்கு தனக்கு இடையே நடந்த உண்மையான நிகழ்வுகள் அதன் சூழ்நிலையை தெளிவுபடுத்தி, ஆதாரங்கள் மற்றும் இருவருக்கும் இடையே நடைபெற்ற பண பரிமாற்றங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தினார்.
இதனுடன், ரூ. 2 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், ஒப்புக்கொள்ளப்பட்ட பணத்தை தராமல் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு புகார்தாரர் வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனேவே இருமுறை வந்திபோது அவர்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ரூ. 29 லட்சம் பெற்றுக்கொண்டு, அதில் பங்கேற்காமல் சென்றுவிட்டார் என அவர் மீது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் மோசடி புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பதில் அளித்த பின், நீதிமன்றத்தில் மனு அளித்தார் சன்னி லியோன். இந்த மனு மீதான விசாரணையில்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்ககூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: என் அழகை அட்ஜெஸ்ட் செய்யுமாறு சொன்ன இயக்குநர் - பிரியங்கா சோப்ரா பகிர்வு