நடிகர் ஷாருக் கான் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது வீட்டில் நேற்று (செப்.19) விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக சிலை வைத்து வழிபட்டார்.
தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாருக் கான், ”விநாயகப் பெருமானின் ஆசிர்வாதம் அடுத்த வருடம் அவரை மீண்டும் பார்க்கும்வரை நம் அனைவருக்கும் இருக்கட்டும். கணபதி பாப்பா மோரியா” என பதிவிட்டார். இந்த புகைப்படம் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே நெட்டிசன்கள் பலர் லைக் செய்தனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
முன்னதாக 2018ஆம் ஆண்டு ஷாருக் கான் தனது இளைய மகன் அப்ரம் கானுடன் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகரை பிரார்த்தனை செய்ததற்காக ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 17 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநருடன் நடனமாடிய ஷாருக் கான்