ETV Bharat / sitara

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 'பிரவாசி ரோஜ்கர்' செயலி அறிமுகம் செய்த சோனு சூட் - சோனு சூட்டின் புதிய செயலி

மும்பை: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சரியான வேலை வாய்ப்புகளை கண்டறிய உதவும் 'பிரவாசி ரோஜ்கர்' என்னும் செயலியை நடிகர் சோனு சூட் அறிமுகப்படுத்தியுள்ளார்.

சோனு சூட்
சோனு சூட்
author img

By

Published : Jul 23, 2020, 8:08 AM IST

கோவிட்-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததில் பெரும் பங்காற்றியவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். இவரின் இந்த பணிக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். தற்போது இவர் 'பிரவாசி ரோஜ்கர்' ( Pravasi Rojgar) என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலியானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சரியான வேலை வாய்ப்புகளைக் கண்டறிய உதவும்.

இது குறித்து சோனு சூட் கூறுகையில், "புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கும்போது அவர்களின் உரையாடல்கள் பெரும்பாலும் இந்த சூழ்நிலைக்கு மத்தியில் எப்படி புதிய வேலைவாய்ப்பை தேடுவது என்று இருக்கும். இந்த உரையாடல் என்னை வெகுவாக பாதித்தது. இந்த செயலிக்காக கடந்த சில மாதங்களாக நிறைய திட்டமிடல், சிந்தனை, தயாரிப்பு என பல பணிகள் சென்றுகொண்டிருந்தன. தற்போது அது முழுமையடைந்து விட்டன என்று நம்புகிறேன்.

வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் திறமையான இளைஞர்களுக்கு உயர்மட்ட அமைப்புகளுடன் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன்மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வேலைவாய்ப்பு ஆலோசகர்கள் மூலம் புலம்பும் தொழிலாளர்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகளுக்கு உதவும்.

நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கண்டறிய இந்த செயலி மிகவும் உதவும். இதில், கட்டுமான பணிகள், பொறியியல் துறைசார்ந்த பணிகள், ஆட்டோமொபைல், இ-காமர்ஸ், பிபிஓக்கள், செக்யூரிட்டி பணிகள், தொடர்பான 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன" என்றார்.

இந்த செயலிக்காக புது தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர், அகமதாபாத், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 24x7 ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. பிரவாசி ரோஜ்கர் வேலைவாய்ப்பை கண்டறிய மட்டும் உதவாமல் ஸ்போக்கன் இங்கிலீஷ், குறிப்பிட்ட வேலை வாய்ப்பு பயிற்சி திட்டங்கள் உள்ளிட்டவைகளும் வழங்குகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.