மும்பை: விடுமுறைக் கொண்டாட்டத்தை முடித்து மாலத்தீவுக்கு குட்பை சொல்லி கிளம்பியுள்ளார் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
தலையில் தொப்பி, ஷார்ட் கவுன் அணிந்து நீள நிறத்தில் பொன்னாடை போர்த்தியது போன்ற வானம், தெள்ளத்தெளிவான நீருடன் இருக்கும் கடல் பின்னணியில் மேலே பார்த்து இயற்கையை ரசித்தவாறு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவர் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு முறை நான் மாலத்தீவை விட்டு புறப்படும்போது எனது இதயத்தில் சிறு பகுதியை அங்கேயே விட்டு வருகிறேன். அடுத்தமுறை மீண்டும் சந்திக்கும் வரை என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வந்த சோனாக்ஷி, விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி லைக்குகளை அள்ளியதுடன், ரசிகர்களையும் குஷிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து தற்போது விடுமுறையை முடித்து நாடு திரும்பியுள்ளார். அதற்கு முன்னதாக, கடல் நீர் பின்னணியில் இயற்கையை ரசித்தவாறு ரம்மியமான புகைப்படத்தை வெளியிட்டு மாலத்தீவுக்கு குட்பை சொல்லியுள்ளார்.
சமீபத்தில் குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சென்றிருந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், நாள்தோறும் பிகினி போட்டோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.
அதேபோல் நடிகை வேதிகா, சமந்தா உள்ளிட்டோரும் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டனர்.
அந்த வரிசையில் சோனாக்ஷி சின்ஹாவும் அங்கே விடுமுறையை கொண்டாடிவிட்டு வந்துள்ளார்.
பூஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா என்ற படத்தில் சோனாக்ஷி சின்ஹா நடித்து வருகிறார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போர் பின்னணியில் படம் தயாராகி வருகிறது.
இதையும் படிங்க: வெள்ளி விழாவில் அடியெடுத்துவைக்கும் ரியல் பொம்மி பேக்கரி