2013ஆம் ஆண்டு மாரடைப்பால் மறைந்த தாதா இக்பால் மிர்ச்சிக்கு ஒரு பயங்கரவாத கும்பலோடு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அமலாக்கத் துறை இயக்குநரகம், இக்பால் மீது குற்றவியல் வழக்கு போட்டது. இதில் தொடர்புடையதாகக் கருதப்படும் பிந்த்ரா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே பிந்த்ராவுடன் தொழில் சார்ந்த பரிவர்த்தனைகள் இருந்ததால் ராஜ் குந்த்ரா விசாரணைக்கு வருமாறு அமலாக்கத் துறை சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இதையேற்று ராஜ் குந்த்ரா இன்று அமலாக்கத் துறை இயக்குநரகத்திற்கு வருகைபுரிந்தார். அப்போது, அவரிடம் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: ராக்கிங் ஸ்டார் யாஷ் அடித்த இரண்டாவது இன்னிங்ஸ்!