ETV Bharat / sitara

மருத்துவப் பணியாளர்களை மரியாதையுடன் நடத்துங்கள் - ஷில்பா ஷெட்டி - பாலிவுட் செய்திகள்

மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுக்கக் கோரியும் நடிகை ஷில்பா செட்டி காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Shilpa Shetty
Shilpa Shetty
author img

By

Published : Apr 27, 2020, 3:34 PM IST

கரோனா பரவலைத் தடுக்க மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் முதல் வரிசை வீரர்களாக களத்தில் போராடி வரும் நிலையில், இறந்த மருத்துவர்களின் உடல்களை புதைக்க அனுமதிக்காமல் மக்கள் போராடும் செய்திகளும், சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படும் வேதனைக்குரிய செய்திகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை ஷில்பா ஷெட்டி காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்களின் தன்னலமற்ற வேலைகளைக் கருத்தில் கொண்டு ஒரு நிமிடம் காணொலியைப் பார்க்குமாறு ஆரம்பத்தில் கோரிக்கை விடுக்கும் ஷில்பா, எந்தவித காரணங்களுக்காகவும் மருத்துவர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் மீதான வன்முறைகளை ஊக்குவிக்காமல் உரிய மரியாடையுடன் அவர்களை நடத்தக்கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.

நம் வாழ்க்கைக்காக தங்களின் வாழ்க்கையைப் பணயம் வைக்கும் அவர்களுக்காக மனிதாப அடிப்படையில் குரலாவது கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் மற்றொரு பிரபல நடிகையான ரவீனா டாண்டனும் மருத்துவப் பணியாளர்களுக்காகக் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த ரீமேக் படங்களின் தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.