ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டதற்காக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை காவல்துறையினர் கைது செய்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் ராஜ் குந்த்ராவின் பழைய ட்விட்டர் பதிவுகளை சமூக வலைதளவாசிகள் தோண்டி எடுத்து திரும்ப பதிவு செய்துவருகின்றனர்.
அதில் ஒரு பதிவில், ஆபாசத்துக்கும் விபச்சாரத்துக்கும் உள்ள வித்தியாசம் குறித்து பதிவிட்டிருந்த ராஜ், கேமராவில் செய்யும் பாலியல் தொழிலுக்கு பணம் செலுத்துவது ஏன் சட்டப்பூர்வமாக இருக்கிறது எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன எனவும் கேட்டிருந்தார்.
ஆபாச படங்களில் நடிப்பவர்கள் எப்படி நடிக்க செல்கிறார் என்று பதிவிட்டிருந்த மற்றொரு ட்வீட்டில், "இந்தியா: நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், கிரிக்கெட் வீரர்கள் அரசியல் செய்கின்றனர், அரசியல்வாதிகள் ஆபாச படம் பார்க்கின்றனர், ஆபாச படங்களில் நடிப்பவர்கள் நடிகர்களாகின்றனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டை பலரும் தற்போது கேலி செய்துவருகின்றனர். ஆபாச படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கும் வழக்கில் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: காங்கிரஸின் பொய்களை முறியடியுங்கள்- நரேந்திர மோடி!