ETV Bharat / sitara

அக்‌ஷய் குமாருடன் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டது மகிழ்ச்சி - மனுஷி சில்லர் - மனுஷி சில்லர் பிரித்விராஜ்

மும்பை: அக்‌ஷய் குமாருடன் மீண்டும் 'பிரித்விராஜ்' படப்பிடிப்பில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக மனுஷி சில்லர் தெரிவித்துள்ளார்.

மனுஷி சில்லர்
மனுஷி சில்லர்
author img

By

Published : Oct 16, 2020, 7:01 PM IST

மனுஷி சில்லர் 2017ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்று இந்திய நாட்டிற்குப் பெருமைச் சேர்த்தவர். மாடலிங் துறையில் பணியாற்றிவந்த இவர், உலக அழகிப் பட்டம் வென்றதை அடுத்து படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.

பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடித்துவருகிறார்.

22 வயதே ஆகும் மனுஷி சில்லர், முதன் முறையாக பாலிவுட்டில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக 'பிரித்விராஜ்' என்ற வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார்.

12ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட மன்னர் பிரித்விராஜ் சவுகானின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்குகிறார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்ட பொருள்செலவில் இப்படம் உருவாகிவருகிறது.

இதில், பிரித்விராஜ் மனைவியான சன்யோகிதா கதாபாத்திரத்தில் ராணியாக நடிக்கிறார் மனுஷி சில்லர். பல முன்னணி நடிகைகளுக்கும் கிடைக்காத இந்த அரியவாய்ப்பு மனுஷி சில்லருக்கு கிடைத்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. அக்‌ஷய் குமாருடன் மீண்டும் 'பிரித்விராஜ்' படப்பிடிப்பில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக மனுஷி சில்லர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மனுஷி சில்லர் கூறியிருப்பதாவது:

"'பிரித்விராஜ்' படப்பிடிப்புத் தளத்திற்கு மீண்டும் வந்தது எனக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது. நான் ஒவ்வொரு நாளும் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கான நாள்களை எதிர் நோக்கிக் கொண்டிருந்தேன்.

அக்‌ஷய் குமாருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இன்னும் அவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன.

அக்‌ஷய் தனது பணியில் நேர்த்தியுடனும் ஊக்குவிக்கும்விதமாகவும் இருப்பார். அவர் பல நேரங்களில் என்னையும் ஊக்குவித்துள்ளார். இதற்காக அவருக்கு நான் எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதை மிகவும் விரும்புகிறேன்.

இந்தப் படப்பிடிப்புக் குழுவினருடன் நான் இணைந்து பணியாற்றுவது நற்பேறாக கருதுகிறேன். இது எனக்கு முதல் படம். இங்கு இருப்பவர்கள் அனைவரும் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர்.

முதன் முதலாக நான் இப்படத்தில் ஒப்புக் கொண்டபோது எனக்குச் சற்று பயம் இருந்தது. காரணம் படக்குழுவினர் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். ஆனால் படப்பிடிப்பில், அவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அக்‌ஷய் குமார் உள்பட எனக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.