மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'திருஷ்யம்' திரைப்படம் மூலம் தென்னிந்திய திரையுலகை வியக்க வைத்தவர் இயக்குநர் ஜீத்து ஜோசப்.
இவர், அதற்கு முன்பு, மெமரீஸ்? மை பாஸ் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். திருஷ்யம் மாறுபட்ட கதைக்களத்துடன் கிரைம் திரில்லராக வெளியாகி ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் கமல்ஹாசன், கௌதமியை வைத்து திருஷ்யம் படத்தின் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தை இயக்கினார். இந்தப் படமும் சூப்பர்ஹிட் ஆன நிலையில், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.
தொடர்ந்து மோகன்லால் மகன் பிரணவ் நடித்த ஆதி திரைப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கினார். இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது. மலையாள திரையுலகில் பிசி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் ஜீத்து தற்போது இந்தியில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
பாலிவுட் நடிகர்களான இம்ரான் ஹாஷ்மி, ரிஷி கபூர் நடிக்கும் இந்த படத்திற்கு 'பாடி' என பெயரிடப்பட்டுள்ளது. கிரைம் திரில்லராக இந்த படம் தயாராகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
வேற லெவலில் இருக்கப் போகிறது ‘வலிமை’ - கலை இயக்குநர் இவர்தான்?