ETV Bharat / sitara

'திரைத்துறையில் சித்தார்த் எனக்கு நெருங்கிய நண்பர்' - மனம் திறக்கும் கியாரா - சித்தார்த் குறித்து கியாரா அத்வானி

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'ஷேர்ஷா' திரைப்படத்தில் நடித்துவரும் கியாரா அத்வானி, படத்தின் நாயகன் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் தனக்கிருக்கும் நட்பு குறித்து மனம் திறந்துள்ளார் .

Kiara Advani gushes about rumoured beau Sidharth Malhotr

author img

By

Published : Aug 6, 2021, 12:51 PM IST

எம்.எஸ்.தோனி, கபீர் சிங், குட் நியூஸ் என தொடர் ஹிட் படங்களால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கியாரா அத்வானி. தற்போது இவர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து 'ஷேர்ஷா' என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் பரம் வீர் சக்ரா விருது பெற்றவரும், ராணுவ கேப்டனுமான விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ராணுவ அலுவலராக சித்தார்த் மல்ஹோத்ரா மிகவும் சிரத்தையெடுத்து நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,பேட்டி ஒன்றில் சித்தார்த் குறித்து கியாரா கூறுகையில், "ஒரு கோ-ஸ்டாராக சித்தார்த் மிகவும் உந்துதலோடும் கவனத்தோடும் செயல்படுபவர். அவர் நிறைய வாசிக்கிறார். தன்னைத் தானே தயார்படுத்திக் கொள்கிறார்.

நாங்கள் நன்றாகப் பழகினோம். இந்தத் துறையில் அவர் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்றே கூறுவேன். நண்பராக இருந்தாலும், அவர் எப்போது நிறைவானவராகவும், வேடிக்கையாகவும் இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

விஷ்ணுவர்தன் இயக்கும் இத்திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: சன்னி லியோன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.