பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தனது குழந்தைகளான மகன் யாஷ், மகள் ரூஹி ஆகியோரின் மூன்றாவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார்.
குழந்தைகளுக்கு மூன்று வயதாகிவிட்டதால் இது குறித்து தனது சமூகவலைதளத்தில் உணர்வு மிக்க கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
![Karan Johar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5995515_karan-ins-2.jpg)
அதில், அபிமான இரட்டையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் இந்த சமூகத்தில் அபிமானமிக்க ஒற்றை பெற்றோர். ஆனால் உண்மையில் நான் அப்படி இல்லை.
எனது தயார் மிக அழகான உணர்வுப்பூர்வமான என் குழந்தைகளுக்கு இணை பெற்றோராக உள்ளார். அவரை ஆலோசிக்காமல் குழந்தைகள் விசயத்தில் நான் எந்தொரு முக்கிய முடிவும் எடுப்பதில்லை.
இன்று இரட்டையர்கள் மூன்றாவது வயதில் கால் அடி எடுத்து வைக்கின்றனர். இது எங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு உணர்வு. ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் நாங்கள் வாழ்கிறோம்.
யாஷ், ரூஹியுடன் எங்கள் உலகம் முழுமையடந்தற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது குடும்ப புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
![Karan Johar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5995515_karan-ins-1.jpg)
2017 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் பிறந்த கிரண் ஜோஹரின் இரட்டை குழந்தைகளின் பிறந்தநாள் விழாவில், ஷாருக்கானின் மகன் ஆப்ராம், கரீனா கபூர் மகன் தைமூர், சோஹா அலிகான் மகள் இனயா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கரண் ஜோஹர் தயாரிப்பில் பிரதாப் சிங் பானு இயக்கத்தில் விக்கி கவுஷல், பூமி பெட்னேகர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பூட்' படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக உள்ளது.