ETV Bharat / sitara

சமந்தா - நாக சைதன்யா பிரிவு: விசயத்தை போட்டுடைத்த கங்கனா! - சமந்தா விவகாரத்து

சென்னை: சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு பாலிவுட் முன்னணி நடிகர் ஒருவர் காரணம் என நடிகை கங்கனா ரணாவத் சமூகவலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Kangana
Kangana
author img

By

Published : Oct 4, 2021, 1:13 PM IST

சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக வெளியான நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யாவை விவகாரத்து செய்ய போகிறார் என்ற செய்திக்கு இருவரும் அக்டோபர் 2ஆம் தேதியுடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.

தாங்கள் இருவருமே திருமண உறவிலிருந்து பிரிந்து விட்டதாக சமந்தாவும், நாக சைதன்யாவும் சமூகவலைதளத்தில் அறிவித்தனர்.

Kangana
சமந்தா - நாக சைதன்யா

இந்த அறிவிப்பு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், நடிகை கங்கனா ரணாவத், சமந்தா - நாக சைந்தன்யா பிரிவுக்கு, பாலிவுட்டில் முன்னணி நடிகர் ஒருவர் காரணம் என மறைமுகமாக திட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், " எந்த விவகாரத்திலும் தவறு என்பது ஆண் மீது தான். நான் பழமைவாதியாகத் தெரியலாம், பாரபட்சமாகப் பேசுவதாக நினைக்கலாம். ஆனால் கடவுள் ஆணையும் பெண்ணையும் அவர்களின் இயல்பை செயல்பாட்டை அப்படிதான் படைத்திருக்கிறார்.

Kangana
சமந்தா - நாக சைதன்யா

ஆதி காலத்திலிருந்து பார்த்தாலும் விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் ஆண் வேட்டையாடுபவன், பெண் வளர்த்தெடுப்பவள். பெண்களை ஆடைகள் போல்மாற்றி பின் அவர்களிடம் உற்ற நண்பர்களாக இருக்கிறோம் என்று பேசும் ஆண்களிடம் கனிவு காட்டுவதை நிறுத்துங்கள். ஊடகங்களிலிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் ஊக்கம் பெறும் இப்படிப்பட்டவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

அவர்களைப் புகழ்ந்து பெண்ணின் குணத்தைப் பற்றித் தீர்மானிக்கிறார்கள். விவாகரத்து கலாசாரம் முன்னெப்போதையும் விட அதிகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்த தென்னிந்திய நடிகர் 4 வருடங்களாகத் திருமண வாழ்க்கையிலும் 10 வருடங்களுக்கும் மேலாக அந்தப் பெண்ணுடன் காதலிலும் இருந்துள்ளார்.

Kangana
கங்கனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இந்த நடிகர் சமீபத்தில் பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என அறியப்படும் ஒரு உச்ச நட்சத்திரத்தைச் சந்தித்திருக்கிறார். அந்த நட்சத்திரம் பல பெண்களின், குழந்தைகளின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டுத் தற்போது பலருக்கும் வழிகாட்டுபவராகவும் அறிவுரை சொல்பவராகவும் இருக்கிறார்.

எனவே எல்லாம் எளிதாக முடிந்துவிட்டது. இது கிசு கிசு அல்ல. நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று நம் அனைவருக்கும் தெரியும்" எனத் தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் கங்கனா மறைமுகமாக ஆமீர்கானை தான் வசைப்பாடுகிறார் என் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Kangana
கங்கனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

காரணம் 'லால் சிங் சட்டா' படத்தில் ஆமீர்கானுடன் நாக சைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சாய் பல்லவியுடன் நாக சைதன்யா நடிப்பில் வெளியான 'லவ் ஸ்டோரி' படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் ஆமீர் கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இதையும் படிங்க: ’நாங்கள் பிரிகிறோம்’: விவாகரத்தை அறிவித்த சமந்தா - நாக சைதன்யா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.