ETV Bharat / sitara

வெளியான ஹிருத்திக் - தீபிகாவின் ‘ஃபைட்டர்’ பட அப்டேட்!

மும்பை: நடிகர் ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோனே நடிக்கும் 'ஃபைட்டர்' என்னும் புதியபடத்தை இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்.

author img

By

Published : Jul 9, 2021, 11:58 AM IST

hrithik
hrithik

ஹிருத்திக் ரோஷன் நடித்த 'பேங் பேங்', 'வார்' என்னும் இரண்டு படங்களை இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். தற்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக 'ஃபைட்டர்' படத்தின் மூலம் கைகோர்த்துள்ளது.

வயாகாம் 18,சித்தார்த் ஆனந்த் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. 'ஃபைட்டர்' படத்தில் ஹிருத்திக் ரோஷன் விமானப்படை அலுவலராக நடிக்கவுள்ளார்.

இந்திய சினிமாவில் முதன் முறையாக ஃபைட்டர்' படத்தில் வான்வழி சண்டைக் காட்சிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார்.

இதுகுறித்து சித்தார்த் ஆனந்த தெரிவிக்கையில், "'ஃபைட்டர்' என் கனவுப் படம். இந்த படத்தின் மூலம் பெரிய திரையில் ஆக்சன் காட்சிகளைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல படமாக அமையும். பல்வேறு நாடுகளில் ஃபைட்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்திய விமானப் படையின் சேவை, தியாகம், நாட்டுபற்றை பறைசாற்றும் படமாக இது இருக்கும்" என்றார்.

சித்தார்த் ஆனந்த் தற்போது ஷாருக் கானை வைத்து 'பதான்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பின் 'ஃபைட்டர்' படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் உருவாகும் 'ஃபைட்டர்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: ஹிருத்திக் - தீபிகாவின் ‘ஃபைட்டர்’ பட்ஜெட் ரூ. 250 கோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.