ETV Bharat / sitara

ரன்வீருடன் '83' படத்தில் நடித்தது புத்துணர்வு - 'ரோமி பாட்டியா' தீபிகா - 83 வெளியாகும் தேதி

'83' படத்தில் நாங்கள் நடித்த கதாபாத்திரம் மற்ற படங்களை விட, அனைவராலும் மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என தீபிகா தெரிவித்துள்ளார்.

Deepika Padukone
Deepika Padukone
author img

By

Published : Feb 23, 2020, 2:37 PM IST

'83' படத்தில் ரன்வீரும் நானும் இணைந்து நடித்துள்ளது மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளதாக தீபிகா தெரிவித்துள்ளார்.

கபில் தேவ் தலைமையில் கடந்த 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்றது. இதை '83' என்ற பெயரில் கபீர் கான் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க, கபில் தேவ்வின் மனைவி ரோமி பாட்டியா கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி, நல்ல வரவேற்பைப்பெற்றது. இப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது.

இதில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க, அவரது மனைவி கதாபாத்திரத்தில் மனைவி தீபிகா படுகோனே நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து தீபிகா கூறுகையில், 'இதற்கு முன் நானும் ரன்வீரும் இணைந்து நடித்த படங்களை விட, இப்படம் எங்களுக்கு ஒரு புத்துணர்வை அளிக்கிறது. முன்பு நாங்கள் நடித்த படங்களை விட, இது முற்றிலும் மாறுபட்ட ஒன்று.

இப்படத்தில் நாங்கள் ஒன்றாக நடிப்பது குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டோம். இந்தப் படத்தில் நாங்கள் நடித்த கதாபாத்திரம் மற்ற படங்களை விட, அனைவராலும் மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் 'என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், 'ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்த 'சபாக்' படத்தை நான் முதன் முதலில் தயாரித்தேன். எனது தேர்வு எப்போதும் நடிகையாகத்தான் இருக்கும். படத்திற்கு கதை கூற வருபவர்கள், கதை கூறுகையில் எனக்கு கதையில் திருப்தி இருந்தால் நடிப்பேன். அது மட்டுமல்லாது, அந்தப் படத்திற்கு பணத்தேவைகள் இருந்தால், நான் கண்டிப்பாக தயாரிப்பாளராகவும் அவர்களுக்கு உதவுவேன்.

தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். மொழி ஒரு போதும் தடையில்லை. எனக்கு நல்ல கதையம்சம் கிடைத்தால், நான் கட்டயாம் நடிப்பேன்' என்றும் கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'ஐஸ்வர்யா' படத்தில் தீபிகா நடித்துள்ளார். சமீபத்தில் மகாபாரதத்தில் திரெளபதியாக நடிக்கவிருக்கும் தீபிகா, அப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறவும் ஆசை இருப்பதாகத் தெரிவித்தார்.

இதையும் வாசிங்க: '83' திரைப்படத்தின் புதிய லுக்! - ரோமி பாட்டியாவாக தீபிகா படுகோன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.