பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலீயா பட், மௌனி ராய், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'பிரம்மாஸ்த்ரா'. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்குகிறார். நடிகை யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், அபூர்வா மேத்தா, நமித் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.
-
It's final! Brahmāstra releases on 4th December, 2020 in Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada! #Brahmastra@SrBachchan #RanbirKapoor @aliaa08 @iamnagarjuna @RoyMouni #AyanMukerji @ipritamofficial @apoorvamehta18 #NamitMalhotra @MARIJKEdeSOUZA pic.twitter.com/lJo60VxRvf
— Karan Johar (@karanjohar) February 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It's final! Brahmāstra releases on 4th December, 2020 in Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada! #Brahmastra@SrBachchan #RanbirKapoor @aliaa08 @iamnagarjuna @RoyMouni #AyanMukerji @ipritamofficial @apoorvamehta18 #NamitMalhotra @MARIJKEdeSOUZA pic.twitter.com/lJo60VxRvf
— Karan Johar (@karanjohar) February 2, 2020It's final! Brahmāstra releases on 4th December, 2020 in Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada! #Brahmastra@SrBachchan #RanbirKapoor @aliaa08 @iamnagarjuna @RoyMouni #AyanMukerji @ipritamofficial @apoorvamehta18 #NamitMalhotra @MARIJKEdeSOUZA pic.twitter.com/lJo60VxRvf
— Karan Johar (@karanjohar) February 2, 2020
அந்நியன், ராவணன் படங்களின் ஒளிப்பதிவாளர் வேலாயுதம் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். 'பிரம்மாஸ்திரா' படம் மூன்று பாகங்களாக உருவாகும் நிலையில், இதன் முதல் பாகத்தை இந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி வெளியிடவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகவிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, நியூயார்க், மும்பை, மாணலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.