ETV Bharat / sitara

போதைப்பொருள் வழக்கு: பாலிவுட் ஒப்பனை கலைஞர் கைது!

author img

By

Published : Dec 10, 2020, 8:02 PM IST

மும்பை: போதைப் பொருளான கொக்கையின் பயன்படுத்தியாக பாலிவுட் ஒப்பனை கலைஞர் சூரஜ் கோடம்பேவை என்.சி.பி அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.

makeup artist
makeup artist

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையில் போதைப் பொருள்கள் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (என்.சி.பி) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், நடிகையும், சுஷாந்தின் தோழியுமான ரியா சக்கரபோர்த்தி, அவரது சகோதரை போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி கைது செய்து, என்.சி.பி. அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இதனால் பாலிவுட் வட்டரமே கலக்கத்தில் ஆழ்ந்தது.

இதனையடுத்து, தற்போது பிரபல ஒப்பனை, சிகையலங்கரக் கலைஞருமான சூரஜ் கோடம்பேயை என்.சி.பி அலுவலர்கள் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து கொக்கைன் என்னும் போதைப் பொருட்களை கைப்பற்றியதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜரர் படுத்தப்படுவார் என தெரிவித்தனர்.

மும்பையில் கடந்த இரு தினங்களாக போதைப் பொருள் தடுப்பு பிரிவுனர் மேற்கொண்டு வரும் சோதனையில் இதுவரை 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.