தனது அடுத்தப் படமான 'சுப் மங்கள் ஜியாதா சாவ்தன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படங்களில் தான் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
தன் படங்களை ரசிகர்கள் விரும்பி பார்ப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு நடிகனாக தன் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக தான் இருப்பதிலும், குடும்பத்தில் உள்ள அனைவரும் தன் படத்தினை சென்று பார்ப்பதை தான் விரும்புவதாகவும் ஆயுஷ்மான் கருத்து தெரிவித்தார்.
'சுப் மங்கள் ஜியாதா சாவ்தன்' திரைப்படமும் குடும்பத்துடன் சென்று பார்க்ககூடிய வகையில் இருக்கும் என தெரிவித்த ஆயுஷ்மான், ரசிகர்களின் இதயத்தை தொடும் வகையில் தன் படம் இருக்கும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: அமிதாப் பச்சன் நடிக்கும் 'ஜுந்த்' - ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!