தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் அடா சர்மா. பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் இயக்கத்தில் உருவான '1920' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். த்ரில்லர் படமாக உருவான இப்படத்தில் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அடுத்தடுத்து நடித்த படங்களில் கவர்ச்சி வேடம் ஏற்று நடித்துவந்தார். இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான 'இது நம்ம ஆளு' படத்தில் சிறிய வேடம் ஏற்று நடித்தார்.
சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'சார்லி சாப்ளின் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறாததால் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். படவாய்ப்புகள் குறைந்ததால் அவ்வப்போது போட்டோ ஷூட்டில் எடுக்கப்படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
சில நேரங்களில் சர்ச்சையை கிளப்பும் பதில்களை கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வார். இந்நிலையில், திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் காஸ்டிங் கோச் (திரைப்பிரபலங்களுடன் படுக்கையை பகிர்ந்து கெள்வது) பற்றி அடா சர்மா கூறியுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அதில், "காஸ்டிங் கோச் என்பது வடக்கிலோ அல்லது தெற்கிலோ இருக்கும் ஒன்றல்ல. இது உலகம் முழுவதும் இருக்கும் ஒன்று என நான் நினைக்கிறேன். பல திரைப்பிரபலங்கள் காஸ்டிங் கோச் குறித்த கொடூரமான அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். காஸ்டிங் கோச்சில் நாம் உட்கார வேண்டுமா நிற்கவேண்டுமா அல்லது படுக்கையில் படுக்க வேண்டுமா அல்லது தரையில் உட்கார வேண்டுமா போன்ற நிறைய வாய்ப்புகள் அவர்களால் கொடுக்கப்படுகின்றன" என்று கூறியுள்ளார்.