பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்டிர மாநில அரசுக்கு எதிரான கருத்துக்களையும், மும்பை காவல் துறையை விமர்சித்தும் ட்விட்டரில் பதிவிட்டார். இதனால் அவர் மீதும் அவரது சகோதரி ரங்கோலி மீதும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் அவர் மீதும், அவரது சகோதரி மீதும் போடப்பட்டுள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளையும் இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லாவிற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சிவசேனா கட்சியினரால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தவறிய கங்கனா ரனாவத்துக்கு, மும்பை நீதிமன்றம் பிணையில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாய்னா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!