பிரஞ்சு கயானா: சுமார் 130 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழந்த பெரு வெடிப்பில் தொடங்கிய பரந்த பிரபஞ்சத்தின் மர்மங்களை மனித இனம் தொடர்ந்து ஆராய்ந்துவருகிறது. பருப்பொருள், ஆற்றல், நேரம், நட்சத்திரங்கள், கிரகங்கள், கருந்துளைகள் என்று நம்மை சுற்றி நடப்பதற்கான காரணத்தை அறிவியலுக்கு பின்னால் நின்று வேடிக்கை பார்ப்பது மனிதனின் விசித்திர குணங்களில் ஒன்று.
அதற்காக செயற்கைகோள், விண்கலங்கள், ஏவுகணைகள் என்று தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன. இப்படிப்பட்ட வானளாவிய செயல்களில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முன்னிலை வகிக்கிறது.
இந்த நாசா நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனேடியன் விண்வெளி நிறுவனம் உடன் இணைந்து உலகின் மிகப்பெரிய, சக்திவாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது. இந்த தொலைநோக்கி தென் அமெரிக்கவின் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
30 ஆண்டுகால உழைப்பு
இந்த தொலைநோக்கிக்கு 1960களில் நாசாவின் நிர்வாகியாக இருந்த ஜேம்ஸ் வெப்பின் பெயரிடப்பட்டது. 1990ஆம் ஆண்டு முதலே 29 நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இதற்கான பணியை தொடங்கிவிட்டனர். 30 ஆண்டுகள் முடிவில் 7 டன் எடைக்கொண்ட தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. இதன்மூலம் கிடைக்கக்கூடிய புகைப்படங்கள், தரவுகளை கொண்டு, நட்சத்திரங்கள், கிரக அமைப்புகள் குறித்த விரிவான தகவல்களை சேகரிக்க முடியும்.
இதையும் படிங்க: இந்தியாவின் பிரலே ஏவுகணை சோதனை வெற்றி