ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்பின் சோதனை விமானம் நேற்று (டிச. 08) நிறுத்தப்பட்டது. மிச்சிகன் எல்லைக்கு அருகிலுள்ள டெக்சாஸின் தென்கிழக்கு மூலையில் உள்ள போகா சிக்காவை நெருங்கும்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த ஸ்பேஸ்எக்ஸின் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க், “மக்களை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டுசெல்ல வடிவமைக்கப்படும் ராக்கெட்ஷிப்பின் முன்மாதிரி கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இதன் மூலம் தனது சோதனைக்கு மிக அருகில் சென்றுள்ளது ஸ்பேஸ்எக்ஸ். முன்னதாக ஸ்பேஸ்எக்ஸ் ஐந்து ஸ்டார்ஷிப் விமானங்களைச் சோதனை செய்துள்ளது” என்றார். ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்பின் சோதனை விமானம் மீண்டும் எப்போது செலுத்தப்படும் என்ற தகவல் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க...'2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல மோசடிகளைச் செய்த திமுக ஊழலைப் பற்றி பேசலாமா?'