டெல்லி: தைவான் நிறுவனமான ஆசஸ் தனது புதிய கேமிங் மடிக்கணினிகளை இந்தியத் தகவல் சாதனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 10ஆவது ஜெனரல் இன்டெல் கோர் ஐ7 எச்-சீரிஸ் ஹார்டுவேர், டிடிஆர் 4 3200 MHz ரேம் உடனும் பல உயர்தர அம்சங்களுடனும், கேமிங் வாடிக்கையாளர்களுக்கென தனித்துவ அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
நோக்கியா 5310: பழமை விரும்பிகளை கவரவரும் புது பியூச்சர் போன்
புதிய கேமிங் மடிக்கணினிகளை இந்தியாவில் 79,990 ரூபாய் ஆரம்ப விலையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் எடை குறைவாகவும் இலகுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மடிக்கணினிகளை, கேமிங் பிரியர்களுக்கென அதிக திறன் கொண்ட ஹார்டுவேரைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதாக ஆசஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு அலுவலர் தெரிவித்துள்ளார்.
![ஆசஸ் கேமிங் மடிக்கணினியின் சிறப்பம்சங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8366178_laptop.png)