ETV Bharat / science-and-technology

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S: கிறங்கடிக்கும் விலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தகவல் சாதனம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆல் இன் ஒன் கோலாப்ரேட்டிவ் சாதனமான, சர்பேஸ் ஹப் 2S என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய சாதனத்தின் அறிமுகத்தின் ஒரு பகுதியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் இதன் இந்தியா விலை, விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பையே தகவல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

microsoft Surface Hub 2S, மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S
microsoft Surface Hub 2S
author img

By

Published : May 21, 2020, 10:44 AM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தப் புதிய சர்பேஸ் ஹப் 2S டிஜிட்டல் வைட்போர்டு, சந்திப்பு தளம் மற்றும் இன்னும் பல சேவைகளுக்காக நிறுவனங்களில் இதைப் பயன்படுத்தலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சாதனத்தை இந்தியச் சந்தையில் சர்பேஸ் ஹப் 2 கேமரா மற்றும் சர்பேஸ் ஹப் 2 பென்(Pen) ஆகிய கருவிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, நிறுவனம் ஹப் 2S சாதனத்திற்கான "ஸ்டீல்கேஸ் ரோம்" மொபைல் ஸ்டாண்டையும் அறிமுகம் செய்துள்ளது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S மென்பொருள்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S அனைத்து மைக்ரோசாப்ட் சேவைகளின் அனைத்து விதமான மென்பொருள் மற்றும் மற்ற நிறுவனங்களின் மென்பொருளையும் கொண்டுள்ளது. விண்டோஸ் 10, டீம்ஸ், மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365, மைக்ரோசாப்ட் வைட்போர்டு மற்றும் பல சேவைகள் இதில் உள்ளன.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S சாதனம் 50 விழுக்காடிற்கும் அதிவேகமான கிராபிக்ஸ், 30 விழுக்காடு அதிகமான மேம்பட்ட அதீத செயல்திறனைக் கொண்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த புதிய பதிப்பு முந்தைய சர்பேஸ் ரகத்தை விட மெலிதானது. அசல் மேற்பரப்பு மையத்தை விட 40 விழுக்காடு இலகுவானது என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

microsoft Surface Hub 2S, மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S
மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S

புதிய துல்லிய நிற அமைப்பு தொழில்நுட்பங்களுடன் வெளிவருகிறது ஹானர் ஸ்மார்ட் டிவி!

திரையமைப்பு

இது ​​60 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் பேனலுடன் 50 அங்குல பிக்சல்சென்ஸ் திரையுடன் கூடிய 3840 × 2560 பிக்சல்களைக் கொண்டது. அதேபோல், 10 பிட் வண்ணம், பாதுகாப்பிற்கான கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 10 பாயிண்ட் மல்டி-டச் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் விண்டோஸ் 10 இன் 8ஆவது ஜென் இன்டெல் கோர் i5 செயலி மற்றும் ஒருங்கிணைந்த இன்டெல் யுஎச்.டி கிராபிக்ஸ் 620 உடன் இயங்குகிறது.

உள்விவரங்கள்

8 ஜிபி டிடிஆர் 4 ரேம் மற்றும் 128 ஜிபி எஸ்.எஸ்.டி உடன் வருகிறது. அதேபோல், 8 எலேமன்ட் MEMS மைக்ரோஃபோன் உடன் 3 வழி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

​​யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட், 1 யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் RJ45 உடன் கூடிய கிகாபிட் ஈதர்நெட்டுடன் போர்ட் ஆகியவற்றுடன் வருகிறது. இத்துடன் 1 HDMI வீடியோ உள்ளீட்டு போர்ட் மற்றும் மினி-டிஸ்ப்ளே போர்ட் வீடியோ வெளியீடு ஆகியவை அடங்கும்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S விலை

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியச் சந்தையில் வெளியிட்டுள்ள இந்த புதிய சாதனத்தின் விலையைக் கேட்டால் உங்களுக்கு அவசியம் தலைசுற்றும்.

'கிடைச்சிருச்சு கால் ரெக்கார்டு வசதி' - மகிழ்ச்சியில் நோக்கியா பயனர்கள்!

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S சாதனத்தின் இந்திய விலை ரூ.11லட்சதது 89ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் ஹப் 2S சாதனத்திற்கான "ஸ்டீல்கேஸ் ரோம்" மொபைல் ஸ்டாண்ட் ரூ.1லட்சத்து 17ஆயிரத்து 500 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.