ETV Bharat / opinion

மம்தா வென்றால் தேசிய அளவில் பெரும் தலைவராக உருவெடுப்பார்

பாஜகவை தோற்கடித்து மீண்டும் மம்தா மூன்றாவது முறை முதலமைச்சரானால் தேசிய அளவில் பெரும் தலைவராக அவர் உருவெடுப்பார் என மூத்த செய்தியாளர் அமித் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Mar 18, 2021, 8:01 PM IST

கொல்கத்தா: முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவின் ஆக்ரோஷமான பரப்புரையை மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் அரங்கேற்றுவது தேசிய அளவில் மம்தாவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியதுள்ளது.

தேசிய அளவில் பாஜக எதிர்ப்பு கூட்டணிக்கான அணிவகுப்பு புள்ளியாக இருக்க வேண்டும் என்ற மம்தாவின் லட்சியம் மறையவில்லை, மேலும் பிரதமர் மோடியையும் அவரது கொள்கைகளையும் தொடர்ந்து விமர்சிப்பதன் மூலம் அந்த பதவியை அவர் தொடர்ந்து குறிவைத்து வருகிறார். 2016 இல் சர்ச்சைக்குரிய அறிவிப்பான பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம், ஜிஎஸ்டி வருவாயைப் பகிர்வது, குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் மத்திய நிதியுதவி நலத்திட்டங்கள் ஆகியவற்றை அவர் தொடர்ந்து சாடிவருகிறார்.

பாஜகவின் ஒரே தேசிய மாற்றான காங்கிரஸ் நாடு முழுவதும் சுருங்கிவிட்டதால், திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) தலைவரான மம்தாவின் தேசிய கனவுகளை விரிவாக்கியுள்ளது.

பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை மட்டுமே பிரிப்பதாக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உணரும் நேரத்தில், காங்கிரஸ் அதன் நீண்டகால எதிரிகளான இடது கட்சிகளுடன் திரிணாமுலுக்கு எதிராக மேற்கு வங்க தேர்தலில் போராடுகிறது.

கடந்த ஆண்டுகளில் இந்துத்துவா / தேசியவாத கொள்கையை தீவிரப்படுத்தி பாஜக தெளிவாக பயனடைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலத்தின் மொத்த 42 மக்களவைத் தொகுதிகளில் 18 இடங்களை பாஜக வென்றது அதற்கு ஒரு உதாரணம்.

அப்போதிருந்து, மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான பாஜக தீவிர பரப்புரை, ராமர் புகழ், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மோசமான சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மாநில அரசை அவதூறு செய்வதையும் மையமாகக் கொண்டுள்ளது.

மம்தாவின் 'மண்ணின் மைந்தர் Vs அந்நியர்' பிரச்சாரம், அவர் வங்காளத்தின் மகள் என்பதைக் காட்டி, கடந்த வாரங்களில் பல டி.எம்.சி தலைவர்களை வேட்டையாடிய பாஜகவை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

ஒரு தெரு போராளி என்று அழைக்கப்படும் மம்தா, பாஜகவை தனது முழு வலிமையுடனும் எதிர்கொள்ள முடிவு செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பின் கீழ் தான் தாக்கப்பட்டதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் அவரது அனுதாபிகளிடையே எதிர்ப்பின் வலுவான அடையாளமாக மாறியுள்ளதுடன், டி.எம்.சியின் ஆதரவில் சில கூடுதல் சதவீத வாக்குகளைப் பெற அவளுக்கு உதவக்கூடும்.

மம்தா மூன்றாவது முறையாக முதலமைச்சராக வெற்றிபெற்றால், பாஜகவை தடுத்து நிறுத்த முடியும் என்பதையும், எனவே, தேசிய அளவில் ஒரு எதிர்க்கட்சி முன்னணிக்கு மம்தா தலைமை தாங்குவதற்கு பொருத்தமானவர் என்பதையும் நிருபிக்கும்.

காங்கிரஸின் உயர்மட்ட தலைவர்களுக்கு இது பிடிக்கவில்லை என்றாலும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவை மம்தா பானர்ஜி ஏற்கனவே பெற்றுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.