அமெரிக்காவில் மட்டும் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் கஞ்சாவின் ஒரு வகையான மரிஜுவானா தொழிற்துறை 15 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டக்கூடும் என்று சந்தை அறிக்கைகள் தெரிவிக்கையில், இந்திய விதைத்துறை நமது பூர்வீக மரிஜுவானா மற்றும் கஞ்சா செடியின் தாவர மரபணு வளங்களை பாதுகாத்து வளர்ப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை இழந்து வருகிறது.
இயற்கை நம் இந்தியத் துணைக் கண்டத்திற்கு கஞ்சா இண்டிகா வகை மரிஜுவானாவையும், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அதன் பல துணை வகைகளையும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்துகிறது. இது துணைக் கண்டத்தின் நமது சமூக-பொருளாதார வாழ்க்கையில் ஒரு முக்கியமான செயல்பாட்டைக் கொண்டிருந்தது.
பொழுதுபோக்கு மற்றும் மதப் பயன்பாடுகளைத் தவிர, மரிஜுவானா மற்றும் கஞ்சா நார் ஆகியவை இன்று வலி மருந்து, துணி, கட்டுமானம் என்று நூற்றுக்கணக்கான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. மருத்துவ கஞ்சா வணிகம் என்பது சிறிதளவு மட்டுமே, ஏனெனில் தாவரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒரு தொழிலால் அல்லது மற்றொரு தொழிலால் பயன்படுத்தப்படுகிறது. ‘கிங் காட்டன் ஏற்கனவே மிகவும் நிலையான, மலிவான மற்றும் குறைந்த நீர் தேவைப்படும் கஞ்சா நார் (கஞ்சா சாடிவா எல்) மூலம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாவர மரபணு வளம் (PGR) என்ற நல்ல புதையல் மீது நாம் அமர்ந்திருக்கிறோம், ஆனால் அதைப் பயன்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. நார்ச்சத்து, மருந்து போன்றவற்றின் அடிப்படையில் இதன் வளங்களை பாதுகாக்கவும் வகைப்படுத்தவும் இந்தியா மந்தமாக உள்ளது. 1985 வரை, மரிஜுவானா சட்டப்பூர்வமாக அரசாங்க உரிமம் பெற்ற கடைகளில் விற்கப்பட்டது, மேலும் பாங்கு இன்னும் இந்தியாவில் விற்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அமெரிக்க நிர்பந்தத்தின் காரணமாக, நார்ச்சத்து, உணவு மற்றும் மருத்துவப் பயன்பாடுகளைக் கண்டும் காணாதவாறு இந்த செடிக்கு இந்தியா தடை விதித்தது. இந்தத் தடை சேமித்து வைப்பதை தடுத்து, பயனற்றதாக மாற்றி ஊழலை ஊடுருவ அனுமதித்தது. இப்போது அமெரிக்கா அதனை சட்டப்பூர்வமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் அமெரிக்க மரிஜுவானா தொழிலில் பில்லியன்களை சம்பாதிப்பதற்கு கணிசமான தொழிலாளர்களையும் பயன்படுத்துகிறது. அவர்களிடம் மிகப்பெரிய கஞ்சா மற்றும் கஞ்சா நார் தாவர மரபணு வளம் உள்ளது, அவை காப்புரிமையும் பெற்றுள்ளன.
மரிஜுவானா இயற்கையாகவே நாட்டின் பல பகுதிகளில் வளர்கிறது. போதைப்பொருள் வர்த்தகத்தின் ஒரு பகுதியாக சட்டவிரோதமாக ஒரு சில இடங்களில் வளர்க்கப்படுகிறது. சட்டவிரோத வர்த்தகம் வளர்த்து வருவதால், அரசாங்கம் அதன் தொழில்துறை மூலம் கிடைக்கும் வருவாயை இழக்கிறது, மேலும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களான இமாச்சலப் பிரதேசம் போன்றவற்றில் வெளிநாட்டு விதைகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட (GM) விதைகளை பயன்படுத்துவதால் மாசுபடுத்தும் அபாயத்தில் உள்ளோம்.
சில நாடுகள் கஞ்சா நார் மற்றும் கஞ்சா நார் சார்ந்த பொருட்களின் வணிக சாகுபடிக்கு நடவடிக்கை எடுத்திருந்தாலும், மரிஜுவானாவின் டாலர் அலைகளில் இந்தியா உலாவுகிறது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நோக்கங்களுக்காக கஞ்சா நார் மற்றும் மரிஜுவானா விதைகளை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். இந்திய விதை நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, விவசாயிகளுடன் பூர்வீக வகைகளைப் பற்றி ஆராய்வதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் அல்லது ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குவதற்கும் அனுமதிக்க வேண்டும்.
இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், கேரளா மற்றும் வடகிழக்கின் சில பகுதிகள் அதற்கான நல்ல இடங்களாக இருக்கலாம். இது உள்ளூர் பொருளாதாரங்களை உயர்த்துவதோடு சட்டவிரோத வர்த்தகத்தையும் தடுக்கும். அதன் எண்ணற்ற பயன்பாடுகளைப் பொறுத்தவரை, சொந்த PGR-ன் முழுமையான மதிப்பீட்டை ICAR மற்றும் மாநில விவசாய பல்கலைக்கழகங்கள் நடத்த வேண்டும். NBPGR பல்லுயிர் வளங்களை பாதுகாத்து அவற்றை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு வகைப்படுத்தலாம்.
பொது-தனியார் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதில் தனியார் துறையும் வங்கிகளும் முக்கிய பங்கு வகிக்க முடியும். இந்திய விதைகளும் PGRம் உலகளாவிய ஏற்றம் பெறுவதற்கான உறுதுணையாக இருக்கும். ஒரு முற்போக்கான விதை ஏற்றுமதிக் கொள்கையை செயல்படுத்துவதன் மூலம், ‘இந்தியாவில் தயாரிக்கவும் ஆராய்ச்சி செய்யவும்’ வெளிநாட்டு கஞ்சா நார் மற்றும் மரிஜுவானா நிறுவனங்களை ஊக்குவிக்க முடியும்.
இந்தியர்களுடன் கூட்டாக தொழில்களை தொடங்க இந்தியா அனுமதிக்க வேண்டும். இஸ்ரேலும் ஜெர்மனியும் ஏற்கனவே கஞ்சா பூவை இறக்குமதி செய்வதில் முதலிடத்தில் உள்ளன. கட்டுப்பாட்டை தளர்த்துவதன் மூலம் நாம் சிறந்த ஏற்றுமதியாளர்களாக மாறி விவசாயிகளுக்கும் தொழில்துறையினருக்கும் வருமானத்தை உயர்த்தலாம். மரிஜுவானா மற்றும் கஞ்சா நார் ஆகியவற்றின் ஏற்றுமதி திட்டங்களை நாம் அனுமதிக்க வேண்டும், மேலும் அதன் துணை தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் தொழிலை இந்தியாவில் நிறுவ நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.
ஒரு முன்னோட்டம் என்ற முறையில், கலால் சட்டத்தை மாற்றியமைப்பதன் மூலம், ஓபியம் சாகுபடி மற்றும் செயலாக்கத்தை போன்று மரிஜுவானா ஆராய்ச்சிக்கு அனுமதிக்க நாம் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளலாம், ஆனால் கஞ்சா நார் சாகுபடி மற்றும் ஆராய்ச்சி முற்றிலும் தளர்த்தப்பட வேண்டும். அவ்வாறு செய்ய சட்டப்பூர்வ அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது
பருத்தி மிகவும் தீவிரமான பயிராக இருப்பதால், டன் கணக்கில் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர் போன்றவை தேவைப்படுகின்றன. நாடு முழுவதும் கஞ்சா செடி வளர இந்திய காலநிலை மற்றும் மண் மிகவும் பொருத்தக உள்ளது மேலும் கஞ்சா செடி வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் பயனடையலாம். இது இந்தியா முழுவதும் பரவலாக ஜவுளி மையங்களை அமைப்பதற்கும் உதவும்.
கஞ்சா நார் என்பது பருத்திக்கு மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் மாற்றாகும், மேலும் இது விவசாயிகளின் தற்கொலைகளை குறைக்கும், குறைவான மண்வளம் மற்றும் நீர் வளம் இருந்தாலே போதும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது குறித்தும் உலகில் கஞ்சா நார் துணி மற்றும் துணி உற்பத்தியில் முன்னணி உற்பத்தியாளராக இந்திய ஜவுளித் துறை பாய்ச்சலுக்கு உதவுவது குறித்தும் ஜவுளி அமைச்சகம் கஞ்சா நார் ஜவுளி பற்றிய ஆய்வைத் தொடங்க வேண்டும்,.
நமது பூர்வீக பல்லுயிரியலின் கொடைகளை பின்பற்றுவதன் மூலம், இந்தியத் தொழில்துறையும் விவசாயிகளும் கஞ்சா நார் மற்றும் மரிஜுவானா தயாரிப்புகளில் முன்னோடியாக இருக்க முடியும். ஆனால் இவற்றையெல்லாம் நமது அரசாங்கம் ஒழுங்குபடுத்துமா? அல்லது நமது பல்லுயிர் மரபணுவிற்கு காப்புரிமை பெற்று நமது பன்முகத்தன்மையின் பலன்களிலிருந்து லாபத்தை மற்றொரு வெளிநாட்டு நிறுவனம் அடையும் வரை காத்திருக்குமா?
இதையும் படிங்க: மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி 2.55 கோடி ரூபாய்க்கு ஏலம்!